Adangathey Song Lyrics

Adangathey·2018

Adangathey movie poster
Singer
Arunraja Kamaraj
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
தீர்த்து முடி

ஆண்: அசராதே பணியாதே
உடையாதே உரியாதே
தனியாய் என்றும்
கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே
தடைகளை கண்டு
அகழாதே இகழாதே
தனியாதே தயங்காதே
துணிந்து நின்று
அசையாதே இசையாதே
முடங்காதே மடங்காதே
அடங்காதே
அடங்காதே

ஆண்: தடை பல உடைத்தெறி
படைகளை சிதைத் தெறி
சிதைத்தெறி
வேட்கைகள் அனல் பொறி
வெற்றியின் விசைத் தறி
விசைத்தறி

ஆண்: அடங்காதே
அடங்காதே

ஆண்: எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை

ஆண்: எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை

ஆண்: உணர்வுக்கு திறந்தெழு
அடக்குவான் வெகுண்டெழு
எவனுக்கும் எதற்குள்ளும்
அடக்கிட நினைச்சிட்டா
திமிறிட்டு எழுந்திடு
திசை எட்டும் பறந்திடு

ஆண்: உயரத்தை அடைந்து நீ
உலகுக்கு உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்

ஆண்: அடங்காதே

ஆண்: உறவுகள் உணர்வுகள்
உனக்கென உதிர்த்திட
பறவைகள் விலங்குகள்
தனக்கென பிழைத்திட
திமிருகள் திணவுகள்
தனித்துவம் படைத்திட
தரவுகள் திறமைகள்
உனக்கென அமைந்திட

ஆண்: வா துணிந்து நில்லு
நீ கூர் அம்பின் வில்லு
தீ பறக்கும் சொல்லு
இது தாண்ட தமிழன் தில்லு

A little space to find your voice.

About Adangathey

Adangathey is a song from Adangathey (2018). Performed by Arunraja Kamaraj. Music by G. V. Prakash Kumar. Lyrics by Arunraja Kamaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer