Sottangalla Song Lyrics

Japan·2023

Japan movie poster
Movie
Japan
Singer
Sean Roldan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ
அம்மி வெச்சு அரைக்குதம்மா
தட்டான் போல மெத்தகுற மனசு
குட்டிகரணம் அடிகுதம்மா

ஆண்: சோழகாட்டு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே… யே…

ஆண்: பொக்க நீயும்
நெல்லா தூத்துறியே… யே… யே…
கள்ளி பால தேனா
மாத்துறியே… யே… யே…

ஆண்: வெக்க வந்தா நீதான் ஈரம்
வெயிலுக்கு நீராகாரம்
கும்மிருட்டில் கோடி கோயில்
தீபம் நீதானே

ஆண்: அள்ளி திங்க நீதான் சாதம்
அங்காயம்மன் சாமி பாதம்
கப்பி கல்லு தாகம் தீக்கும்
மேகம் நீதானே

ஆண்: சுட்ட மண்ணு உன் கை அள்ள
சொக்க தங்கம் ஆனேனே
கிட்டிபுள்ளா நீயும் தட்ட
ஏரோபிளேனா போனேனே

ஆண்: அள்ளி உன்ன நா எடுக்க
அத்தனையும் உன் வாசம்
கக்கத்துல ஆகாசம்

ஆண்: ஒட்டு தின்ன ஓரம் ஆடு
ஒத்தாசைக்கு ஏது ஈடு
தொட்டு என்ன நீயும் தூக்க
காலம் மாறாதோ

ஆண்: சொந்தம் உன்ன சேர்ந்த வீடு
சுள்ளி வச்ச மைனா கூடு
அள்ளி அள்ளி ஊட்டும்
தாய காதல் ஏந்தாத்தோ

ஆண்: மொச்சை கொட்ட பல்லு பாத்தா
வெள்ளி வைரம் வேணாமே
எச்சி வச்சு நீயும் தந்தா
வெல்லும் அகும் எல்லாமே…

ஆண்: சிப்பி முத்து நீ சிரிக்க
நட்சத்திரம் கைவீசும்
முத்ததுல பால் வாசம்

ஆண்: சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ
அம்மி வெச்சு அரைக்குதம்மா
தட்டான் போல மெத்தகுற மனசு
குட்டிகரணம் அடிகுதம்மா

ஆண்: சோழகாட்டு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே… யே…

ஆண்: பொக்க நீயும்
நெல்லா தூத்துறியே… யே… யே…
கள்ளி பால தேனா
மாத்துறியே… யே… யே…

A little space to find your voice.

About Sottangalla

Sottangalla is a song from Japan (2023). Performed by Sean Roldan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Arunraja Kamaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer