Aymbathilum Aasai Varum Song Lyrics

Rishi Moolam·1980

Rishi Moolam movie poster
Singer
T. M. Soundararajan
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்

ஆண்: என்றென்றும் பதினாறு போலே
இருப்பது உன் மேனியே
என்றென்றும் பதினாறு போலே
இருப்பது உன் மேனியே

ஆண்: வீடு வரும் போது ஓடி வரும் மாது
நினைவில் இன்னும் நிற்கின்றாள்
ஆறு சுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள்
அன்பு மிக்க தாயாகின்றாள்.........

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண்: சம்சாரம் தன்னோடு பேச
சுவர் ஏறி குதித்தேனம்மா
சம்சாரம் தன்னோடு பேச
சுவர் ஏறி குதித்தேனம்மா
தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும்
தனியே நினைத்தாள் துடிக்கின்றாள்
காலம் என்ற ஒன்று கனிந்து வரும் போது
கணவனுக்கே உயிராகின்றாள்........

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண்: தெய்வத்தால் உருவான பந்தம்
விலகாது மகராணியே
தெய்வத்தால் உருவான பந்தம்
விலகாது மகராணியே

ஆண்: பெற்றெடுத்த பிள்ளை
கற்றுக் கொண்ட தொல்லை
இடையில் இருக்கும் தடையாகும்
செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான்
என்னிடத்தில் தவறில்லையே.......

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
ஓ ஹோ நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

A little space to find your voice.

About Aymbathilum Aasai Varum

Aymbathilum Aasai Varum is a song from Rishi Moolam (1980). Performed by T. M. Soundararajan. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer