Neramithu Neramithu Song Lyrics

Rishi Moolam·1980

Rishi Moolam movie poster
Singer
Susheela and T. M. Soundararajan
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

பெண்: நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

ஆண்: {மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா
தாகமெல்லாம் தீருவது
பிள்ளையின் தாலாட்டிலா} (2)

பெண்: கூண்டுக் கிளிக்கொரு
ஆசை பிறந்த பின்
கோலம் போடும் நேரங்கள்

ஆண்: நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத

பெண்: {திங்கள் ஒளி திங்களை போல்
உங்கள் பிள்ளை உங்களை போல்
உங்களை தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை} (2)

ஆண்: நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னை போல தோன்றுதே

பெண்: நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண்: இன்னும் ஒன்று வேண்டும் என்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதும் என்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன
பிள்ளை கூட இன்பமே

ஆண்: நேரமிது நேரமிது

பெண்: நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண்: இன்பம் என்னும் சொல் எழுத

பெண்: நீ எழுத

ஆண்: நான் எழுத

பெண்: பிறந்தது பேரெழுத

இருவர்: பிறந்தது பேரெழுத

A little space to find your voice.

About Neramithu Neramithu

Neramithu Neramithu is a song from Rishi Moolam (1980). Performed by Susheela, T. M. Soundararajan. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer