Vaada En Raja Song Lyrics

Rishi Moolam·1980

Rishi Moolam movie poster
Singer
S. P. Sailaja
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா ....

பெண்: வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே

பெண்: மன்னனை போல்
தந்தை பக்கம் ராணி இல்லை
கண்ணனைப்போல்
தேவன் பக்கம் ராதை இல்லை
ஊமை நெஞ்சில் கோடி எண்ணம்
தேவன் வந்தால் போதும் சொல்வாள்

பெண்: ஏழைக் கனவே காலம் வருமா
என்றாவது வந்தால் அதை
கொண்டாடும் நெஞ்சம்

பெண்: வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா ....

பெண்: வாடா என் ராஜா கண்ணா

பெண்: வானத்தையே மேகம் மூடும் விந்தை என்ன
மேகங்களில் மின்னல் போடும் வண்ணம் என்ன
மேகத்தைப்போல் பெண்ணும் உண்டு
மின்னலைப்போல் பெண்ணும் உண்டு

பெண்: வானில் நிலவாய் நானே இருந்தால்
என் வாழ்விலும் உன் வாழ்விலும்
அவர் வாழ்விலும் மேன்மை

பெண்: வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா.....

பெண்: வாடா என் ராஜா கண்ணா
ம்ம்ஹ்ஹீம் ஹஹிம் ம்ம்ஹ்ஹீம் ஹஹிம்

A little space to find your voice.

About Vaada En Raja

Vaada En Raja is a song from Rishi Moolam (1980). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer