Chinna Chinna Song Lyrics

Sakthivel·1994

Singer
Sunandha
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹா....ஆஅ.....ஆஅ.
ஆஅ.....ஆஆஅ.....ஆஅ....

பெண்: சின்னச் சின்ன ரத்தினமே
செம்பவளச் சித்திரமே
வண்ண வண்ணத் தாமரையே
வாசல் வந்த வைகறையே
தர்மத் தாய் தூங்குவதால்
தண்டனை ஏழைக்கடா
தங்கமே நீ தூங்க நான் பாடினேன்
நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்....

பெண்: தீயவர்கள் கொடுமை செய்தால்
தெய்வத்திடம் முறையிடுவோம்
தெய்வம் இங்கு கொடுமை செய்தால்
யாரிடத்தில் போய் அழுவோம்

பெண்: சொந்தம் இன்றி வந்த இடம்
சொந்த இடம் ஆனதோ
மந்தை ஆட்டுக் கூட்டத்திலே
விந்தை விளையாடுதோ
கலங்குதே மயங்குதே
காலமே பதில் சொல்லு

பெண்: சின்னச் சின்ன ரத்தினமே
செம்பவளச் சித்திரமே

பெண்: வஞ்சம் இல்லை நெஞ்சுக்குள்ளே
வாழ்க்கை என்ன பாரமம்மா
வாசல் வந்து சேர்ந்த பின்னே
இன்னும் என்ன வாட்டமம்மா

பெண்: கையில் உள்ள ஒளி விளக்கு
கால் நடக்கப் போகுமே
நெஞ்சில் உள்ள விடிவிளக்கு
தக்க துணை ஆகுமே
கலக்கம் ஏன் தயக்கம் ஏன்
காலம் உன் கையிலே

பெண்: சின்னச் சின்ன ரத்தினமே
செம்பவளச் சித்திரமே
வண்ண வண்ணத் தாமரையே
வாசல் வந்த வைகறையே
தர்மத் தாய் தூங்குவதால்
தண்டனை ஏழைக்கடா
தங்கமே நீ தூங்க நான் பாடினேன்
நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்....

பெண்: சின்னச் சின்ன ரத்தினமே....
செம்பவளச் சித்திரமே.....

A little space to find your voice.

About Chinna Chinna

Chinna Chinna is a song from Sakthivel (1994). Performed by Sunandha. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer