Kathal Mayakam Song Lyrics

Pudhumai Penn·1984

Pudhumai Penn movie poster
Singer
P. Jayachandran and Sunandha
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ.....ஆஅ.......ஆ......
ஆஆஆ......ஆஅ......ஆஅ.....ஆ.......

குழு: அன்பே உன் பாதம் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்த போதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.....

பெண்: அன்பே உன் பாதம் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்த போதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்

பெண்: காதல் மயக்கம்….
அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு
கண்களின் அபிநயம்

பெண்: தேகம்.......கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம்......போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே

பெண்: ஒரு காதல் மயக்கம்….
அழகிய கண்கள் துடிக்கும்

குழு: .............................

ஆண்: நான் தூங்கும் வேளை
கனவுகள் தொல்லை....ஈ.....ஈ....ஈ.....

பெண்: நான் தூங்கவில்லை
கனவுகள் இல்லை

ஆண்: மெய்யா பொய்யா

பெண்: மெய்தான் அய்யா
நான் தூங்கவில்லை
கனவுகள் இல்லை

ஆண்: மெய்யா பொய்யா

பெண்: மெய்தான் அய்யா

ஆண்: பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே

பெண்: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும்
உன்னோடு மன்றாடும்

ஆண்: காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு
கண்களின் அபிநயம்

பெண்: தேகம்.......கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம்......போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே

பெண்: ஒரு காதல் மயக்கம்….

ஆண்: அழகிய கண்கள் துடிக்கும்

குழு: லா லால்ல லா

ஆண்: லாலா

குழு: லா லால் லால் லாலா

பெண்: உன் வார்த்தைதானே
நான் சொல்லும் வேதம்.....ம்ம்ம்......ம்ம்....ம்ம்....

ஆண்: உன் பேரை சொன்னால்
ஆயுளும் கூடும்

பெண்: போதும் கேலி

ஆண்: வா வா தேவி
உன் பேரை சொன்னால்
ஆயுளும் கூடும்

பெண்: போதும் கேலி

ஆண்: வா வா தேவி

பெண்: கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது

ஆண்: மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
நீ அன்று மண் பார்க்க

பெண்: காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு
கண்களின் அபிநயம்

ஆண்: தேகம்.......கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம்......போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே

ஆண்: ஒரு காதல் மயக்கம்….

பெண்: அழகிய கண்கள் துடிக்கும்

A little space to find your voice.

About Kathal Mayakam

Kathal Mayakam is a song from Pudhumai Penn (1984). Performed by P. Jayachandran, Sunandha. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer