Ulagame Nee Manithanai Song Lyrics

Ivan·2002

Ivan movie poster
Movie
Ivan
Singer
Sriram and Chorus
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்
ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்

குழு: உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ..
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ

ஆண்: சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா

குழு: உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ.....

ஆண்: இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது
இமயம் பயந்து குளிரில் நடுங்காது
தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது
விடியல் வெடிக்கும் விழிப்பு வரும்போது

ஆண்: எதற்கும் துணிந்த இதயம் செங்கோலாகும்
மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும்
வரும் அஞ்சும் வன்முறை நரம்புகளை
அறுத்து ஒடுக்குவோம்
இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது

குழு: உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ.....

ஆண்: கொடுமைகள் செய்தவர் கொடுமையில் பலியாவார்
கடமையை செய்பவர் கடவுளின் மொழியாவார்
அடிப்பவர் வயிற்றினில் அடிப்பவன் இனி வருவான்
துடிப்பவர் துயரினை துடைத்திட துணிந்தெழுவான்

ஆண்: முகத்தினிலே அறைந்தவரின்
கரம் பிடித்தே முத்தம் வை
மறுபடியும் அறை விழுந்தால்
அதை எதிர்த்தே யுத்தம் செய்

பெண்: நீ பார்க்கிற பார்வையிலே
வரும் சோதனை பயப்படுமே
வெள்ளை மல்லிகைப்பூ சிகப்பாகிடுமோ

இருவர்: மனிதம் வளர்ப்போம் மனிதா

பெண் குழு: உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ.....

குழு: சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா

பெண் குழு: உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ....
ம்ம்ம்ம்.....ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..(2)

A little space to find your voice.

About Ulagame Nee Manithanai

Ulagame Nee Manithanai is a song from Ivan (2002). Performed by Sriram, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer