Chinna Kuyil Oru Song Lyrics

Chinna Kuyil Paaduthu·1987

Chinna Kuyil Paaduthu movie poster
Singer
Ilayaraja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

ஆண்: {சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது} (2)

ஆண்: என்ன செய்யும் இந்தக்
குயில் கண்ணம்மா
பாவமடி சின்னக் குயில் அம்மம்மா…

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

ஆண்: அன்னைக் குயில் தன்னை இந்த
பிள்ளைக் குயில் பார்க்கலே
பிள்ளைக் குயில் ஏக்கம் தன்னை
தந்தைக் குயில் தீர்க்கலே

ஆண்: சின்னக்குயில் தாயின் அன்பை
தினம் தினம் காணாமே
உள்ளத்திலே வாட்டம் கொண்டு
உருகுது தூங்காமே

ஆண்: தந்தை உள்ளம்
எப்போதும் பூமியிலே.....ஏ...
பொங்கி வரும்
தாய் உள்ளம் ஆகாதே....
எந்தத் துணை
ஆனாலும் வாழ்க்கையிலே
சொந்தத் துணை
தாய் போல கிடையாதே....
தாயைப் போல பேசும்
தெய்வம் ஏதும் இல்லே....

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

ஆண்: பிள்ளைக்குயில்
வாழும் கூட்டில்
பெத்தக்குயில் வாழ்ந்தது
பெத்தக்குயில் கூட்டை விட்டு
காட்டுப் பக்கம் பறந்தது

ஆண்: அன்னைக்குயில்
கூட்டில் வேறோர்
ஆசைக்குயில் வந்தது
தந்தைக்குயில் உள்ளம் நோக
சண்டை இட்டுப் போனது

ஆண்: ஆதரவு இல்லாத
சிறு குயிலும்...ம்ம்...
வாடுதம்மா நீர் இல்லா
வயல் போல
தாயின் மடி காணாத
பிள்ளைக் குயில்....
சிந்துதம்மா கண்ணீரை நதி போல
ஏக்கம் தீரும்
நாளும் என்றுதான் வருமோ

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது.....

ஆண்: என்ன செய்யும் இந்தக்
குயில் கண்ணம்மா
பாவமடி சின்னக்குயில் அம்மம்மா…

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

A little space to find your voice.

About Chinna Kuyil Oru

Chinna Kuyil Oru is a song from Chinna Kuyil Paaduthu (1987). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer