Unnai Naane Song Lyrics

Chinna Kuyil Paaduthu·1987

Chinna Kuyil Paaduthu movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: உன்னை நானே......அழைத்தேனே
அழைத்தேனே.....அழைத்தேனே.....
உயிர் நீதான்......
இளமானே இளமானே இளமானே

பெண்: உன்னை நானே...... அழைத்தேனே
உயிர் நீதான்...... இளமானே
உன்னை நானே...... அழைத்தேனே
உயிர் நீதான்...... இளமானே

பெண்: பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்
வாழும் காலங்கள் தோறும்
வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து
நாளும் வாழ்த்துக்கள் கூறும்.....

பெண்: உன்னை நானே......அழைத்தேனே
உயிர் நீதான்......இளமானே

பெண்: சோறூட்டி நாள் எல்லாம்
பசியாறப் பார்த்ததும்
சீராட்டி நான் உனை
தோள் மீது சேர்த்ததும்
ஏதோ கனவானது ஏட்டில்
கதை ஆனது
ஆனால் அதன் ஞாபகம்
நெஞ்சில் நிழலாடுது

பெண்: பெற்றெடுத்த அன்னை இவள்
விண்ணில் இருக்க
பிள்ளை முகம் எப்பொழுதும்
கண்ணில் இருக்க
மண் மூடிப் போனாலும்
வெவ்வேறு ஆனாலும்
என் ஜீவன் எந்நாளும்
உன்னோடு தான்......

பெண்: உன்னை நானே......அழைத்தேனே
உயிர் நீதான்......இளமானே

பெண்: வேறாரும் தாய்
என உருமாறக் கூடுமா
உப்புக் கல் வைரமாய்
ஒரு போதும் மாறுமா
தாரம் இரண்டாகலாம்
தந்தை இணை சேரலாம்
அன்னை இரண்டாகுமோ
ஊரில் இரு வானமோ

பெண்: வந்தவனின் சொந்தம்
இங்கு கட்டில் வரைதான்
என்னுடைய பந்தம்
இங்கு தொட்டில் வரைதான்
காணாமல் நின்றாலும்
காற்றாகிச் சென்றாலும்
கண்ணா என் காலங்கள்
உன்னோடுதான்.....

பெண்: உன்னை நானே......அழைத்தேனே
உயிர் நீதான்......இளமானே

பெண்: பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்
வாழும் காலங்கள் தோறும்
வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து
நாளும் வாழ்த்துக்கள் கூறும்.....

பெண்: உன்னை நானே......அழைத்தேனே
உயிர் நீதான்......இளமானே

A little space to find your voice.

About Unnai Naane

Unnai Naane is a song from Chinna Kuyil Paaduthu (1987). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer