Ethanai Per Unnai Nambi Song Lyrics

Sirayil Pootha Chinna Malar·1990

Singer
K. S. Chithra
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

பெண்: எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா

பெண்: எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எந்நாளும் பண்பாடு தன்மானம்
நீ இங்கு வாராமல் என்னாகும்

பெண்: ஏ உன் மூச்சு
உன் பேச்சு எந்தன் வாழ்விலே
எந்நாளும் உன் ஆட்சி
எங்கள் நெஞ்சிலே
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..

பெண்: பகை தன்னை முடித்திடவே
துயர் தன்னை அழித்திடவே
நிமிர்ந்து எழுந்து வருக வருக
அழகிய திருமகனே

பெண்: தடைகள் உடைத்திடவே
படை தன்னை ஜெயித்திடவே
விரைந்து எழுந்து வருக வருக
இளமையின் தலை மகனே

பெண்: பெண் மனம் தவித்தால் கண்ணீரிலே
தீயோரை அழிப்பாய் செந்நீரிலே
என் கோவிலே என் தெய்வமே
நீ வந்து காட்சி கொடு
தீமை இங்கே நீயும் எங்கே
ஏழைக்கு வாழ்வு கொடு...

பெண்: எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா

பெண்: நரி ஒன்று சிரிக்கிறதே
வலை ஒன்றை விரிக்கிறதே
இனிமை கொடியில் இருக்கும் கனியை
பறித்திட நினைக்கிறதே

பெண்: புலி ஒன்று பதுங்கிடுதே
புயல் இங்கு தொடர்ந்திடுதே
கொடுமை பிடியில் நிறுத்தி மலரை
பறித்திட நினைக்கிறதே

பெண்: நல்லோர்கள் துடித்தால் என்னாவது
இல்லாதோர் தவித்தால் பொல்லாதது
என் கோவிலே என் தெய்வமே
நீ வந்து காட்சி கொடு
தீமை இங்கே நீயும் எங்கே
ஏழைக்கு வாழ்வு கொடு..

பெண்: {எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா} (2)
எந்நாளும் பண்பாடு தன்மானம்
நீ இங்கு வாராமல் என்னாகும்

பெண்: ஏ உன் மூச்சு
உன் பேச்சு எந்தன் வாழ்விலே
எந்நாளும் உன் ஆட்சி
எங்கள் நெஞ்சிலே
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..

பெண்: {எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா} (2)

A little space to find your voice.

About Ethanai Per Unnai Nambi

Ethanai Per Unnai Nambi is a song from Sirayil Pootha Chinna Malar (1990). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer