Kanmanikku Vazhthu Male Song Lyrics

Annan·1999

Annan movie poster
Movie
Annan
Singer
Ilayaraja
Lyricist
Kamakodiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு...
சின்ன மனசு சின்ன உறவு
சின்னஞ்சிறிய உலகம்
இந்த சொந்தம் போதும் போதும்

ஆண்: சிட்டம்மா கைகள்
கொட்டடி கொட்டடி
எந்தன் தத்தமா
முத்தம்மா முத்து
முத்தங்கள் முத்தங்கள்
கொஞ்சம் கொட்டம்மா….

ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு....

ஆண்: ஓம் முகத்தப் பாத்திருந்தா
பாத்திருந்தா
வேறெதுவும் தேவை இல்ல
தேவை இல்ல
ஓங் குரல கேட்டிருந்தா
கேட்டிருந்தா
அந்த சொகம் எங்கும் இல்ல
எங்கும் இல்ல

ஆண்: நெஞ்சம் இசை எடுத்துப் பாடும்
நித்தம் நித்தம் பல கனவு ஆடும்
வானில் நிலவும் உன்னைத் தேடும்
சிறு கூட்டில் கலந்து விளையாடும்
அன்னை தந்தையும் அண்ணன் தானம்மா
இந்த சொந்தம் போதும் போதும்...

ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு....

ஆண்: மல்லியப் பூ பூத்திருச்சு
பூத்திருச்சு
அல்லி ஒன்னப் பாத்திருச்சு
பாத்திருச்சு
சொல்லி வெச்சு செஞ்சது போல்
செஞ்சது போல்
சொர்ணச் செல வந்திருச்சு
வந்திருச்சு

ஆண்: பாசம் பெருக்கெடுத்து ஓட
அதில் படகாய் என் மனது ஆட
ஊரும் உனைப் புகழ்ந்து பாட
அன்பு உலகம் வேறு எங்கு தேட
உந்தன் இன்பமே எந்தன் சொர்க்கமே
இந்த சொந்தம் போதும் போதும்....

ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு...
சின்ன மனசு சின்ன உறவு
சின்னஞ்சிறிய உலகம்
இந்த சொந்தம் போதும் போதும்

ஆண்: சிட்டம்மா கைகள்
கொட்டடி கொட்டடி
எந்தன் தத்தமா
முத்தம்மா முத்து
முத்தங்கள் முத்தங்கள்
கொஞ்சம் கொட்டம்மா….

ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு....

A little space to find your voice.

About Kanmanikku Vazhthu Male

Kanmanikku Vazhthu Male is a song from Annan (1999). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer