Malai Neram Sugam Song Lyrics

Mounam Kalaikirathu·1986

Mounam Kalaikirathu movie poster
Singer
Ramesh and Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..

பெண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..

ஆண்: மாலை நேரம்

பெண்: சுகம் தேடும் நேரம்

ஆண்: பாவையே உந்தன் பார்வையே
மையல் தந்ததினாலே புது மோகம் வருகிறதே

பெண்: காளையே உந்தன் ஜாடையே
நானும் வரைந்ததினாலே புது நாணம் வருகிறதே

ஆண்: நெஞ்சில் மோதும் நாணம்
கொஞ்சும் போது தீரும்

பெண்: கொஞ்சும் அந்தக் காலம்
என்று வந்து சேரும்

ஆண்: அருகிலே நெருங்கி வா
காதோடு காதாக நான் சொல்கிறேன்

பெண்: மாலைநேரம்......

ஆண்: சுகம் தேடும் நேரம்..

பெண்: வானமே நம்மை வாழ்த்தவே
தென்றல் தேரினில் ஏறி நாம்
செல்வோம் ஊர்வலமே

ஆண்: வாழ்விலே.. இன்று நல்ல நாள்..
வானம்பாடிகள் போலே..
புது வாழ்வை நாம் பெறவே

பெண்: கண்ணன் உன்னைத்தானே
கண்ணில் வைத்தாள் மானே

ஆண்: கண்ணில் வைத்த உன்னை
நெஞ்சில் வைத்தேன் நானே

பெண்: இன்னும் ஏன் தாமதம்
என்னோடு முத்தாட வந்தால் என்ன

ஆண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம்

பெண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம்

ஆண்: உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா

பெண்: உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..

ஆண்: லா லா லா லா

பெண்: லாலா லா லா லா லா

ஆண்: லா லா லா லா

பெண்: லாலா லா லா லா லா

A little space to find your voice.

About Malai Neram Sugam

Malai Neram Sugam is a song from Mounam Kalaikirathu (1986). Performed by Ramesh, Uma Ramanan. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer