Uttalangkiri Kiri Song Lyrics

Chinnavar·1992

Chinnavar movie poster
Singer
Malaysia Vasudevan and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா

பெண்: உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா

பெண்: கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
அட வா மாமா வா மாமா

ஆண்: உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே

பெண்: ஆளான பொண்ணுக்கு
நாளான பொண்ணுக்கும்
மாறாது உள்ள மவுசு
தானாக வந்ததோ
வேணான்னு சொல்வது
கூடாது இந்தப் பவுசு

ஆண்: எட்டாத கொம்புல
தேன் கூடு கட்டுது
கிட்டாது எட்டி எடுக்க
இப்போது நிம்மதி
என்னோட உள்ளது
கூடாது தட்டிப் பறிக்க

பெண்: அப்பாவிப் பொண்ணு இது மாமா
தப்பாக என்ன எண்ணலாமா

ஆண்: இப்போது கிட்ட வந்து வீணா
வித்தாரம் பண்ண எண்ணலாமா

பெண்: அட வா மாமா வா மாமா....

ஆண்: உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா ஹோய்

பெண்: குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா

ஆண்: தேடாத சொந்தமும்
கூடாத பந்தமும்
தானாக வந்தது என்ன
காடான நெஞ்சிலே
பூந்தோட்டம் பூத்தது
பூ வாசம் போனதும் என்ன

பெண்: தானா வெதச்சது
பூவா மொளச்சது
நான் என்ன செய்ய அதுக்கு
சாமி படச்சது தேடி முடிச்சது
நாம் என்ன சொல்ல இருக்கு

ஆண்: ஆகாது ஏழைக்கொரு ஆசை
நான் வெறும் கல்லு
என்னத்துக்கு பூச

பெண்: மாறாது என்னுடைய ஆசை
நீ மறுக்காம
வந்திடணும் பேச

ஆண்: அது வீண் தானே வேணாமே

பெண்: உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா

ஆண்: அய் கிட்டாத
பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே

பெண்: கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்

ஆண்: ஏழைக்கிது ஆகாது
ஏமாத்துனா தாங்காது

பெண்: அட வா மாமா வா மாமா

ஆண்: உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா

பெண்: குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா

A little space to find your voice.

About Uttalangkiri Kiri

Uttalangkiri Kiri is a song from Chinnavar (1992). Performed by Malaysia Vasudevan, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer