Manithan Enbavan Dheivamaagalam Song Lyrics

Japan·2023

Japan movie poster
Movie
Japan
Singer
Pradeep Kumar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்
எதுவும் ஆகலாம்

ஆண்: மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்போது
எதுவும் ஆகலாம்

ஆண்: பாதை கொஞ்சம் மாறும்போது
பக்தன் ஆகலாம்
போதை கொஞ்சம் ஏறும்போது
வள்ளல் ஆகலாம்

ஆண்: போகும் பாதை போக போக
நீளம் ஆகலாம்
உன் பாவம் கூட நாளை இங்கு
வேதம் ஆகலாம்

ஆண்: கண் கலங்கி நிற்கும் போது
தாயை தேடலாம்
தாயை வடிவில் யாரோ வந்து
உன்னை சேரலாம்

ஆண்: மாற்றம் வந்து சேருமென்று
காத்திருக்கலாம்
மாசடைந்த மனித நெஞ்சம்
தோற்கடிக்கலாம்

ஆண்: இருட்டிடாமல் வெளிச்சம் இல்லை
உண்மை சொல்லலாம்
அழுக்கில்லாமல் புனிதம் இல்லை
என்ன சொல்லலாம்

ஆண்: கருணை ஒன்று தீயை போல
மனதை தீண்டலாம்
எரியும் மெழுகில் செய்த பாவம்
உருகி தீரலாம்

ஆண்: நதியில் மூழ்கி எழுந்த உள்ளம்
மோட்சம் காணலாம்
நடந்திடாத நதியும் இங்கே
அசுத்தம் ஆகலாம்

ஆண்: கருப்பு இல்லாமல் கடலும் இல்லை
கால்கள் நிற்கலாம்
கலக்கமுற்றால் எதுவும் இல்லை
நாம் சிக்கலாம்

ஆண்: மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்
எதுவும் ஆகலாம்

ஆண்: மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்போது
எதுவும் ஆகலாம்

ஆண்: பாதை கொஞ்சம் மாறும்போது
பக்தன் ஆகலாம்
போதை கொஞ்சம் ஏறும்போது
வள்ளல் ஆகலாம்

ஆண்: போகும் பாதை போக போக
நீளம் ஆகலாம்
உன் பாவம் கூட நாளை இங்கு
வேதம் ஆகலாம்

A little space to find your voice.

About Manithan Enbavan Dheivamaagalam

Manithan Enbavan Dheivamaagalam is a song from Japan (2023). Performed by Pradeep Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer