Mannil Vanthu Minnum Song Lyrics

Enga Thambi·1993

Enga Thambi movie poster
Singer
Mano and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே
காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு: மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே...ஹே

ஆண்: பூங்குயில்கள் பாடும்
என் சோலை எங்கும்
பொன் மயில்கள் ஆடும்
என் மேடை எங்கும்
வேங்கை பாய்ச்சல் உண்டு
நான் வேங்கை இல்லை
வேலின் வீச்சும் உண்டு
நான் வேலும் இல்லை

ஆண்: வம்பிழுக்க இங்கு வந்தால்
கம்பெடுப்பேன்
அன்பு கொண்டு அன்பு செய்தால்
நண்பனாவேன்
கால நேரம் பார்த்து
இங்கு ஆட வந்தேன்

ஆண்: மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

குழு: காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு: மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே...

ஆண்: ஹே ஹே ஹே ஹேய்

ஆண்: நான் நடக்கத் தென்றல்
மலர் பாதை போடும்
நான் நினைக்கும் வண்ணம்
நல்ல நேரம் கூடும்
சாகசங்கள் உண்டு சந்நியாசி இல்லை
பார் முழுக்கச் செல்வேன்
பரதேசி இல்லை

ஆண்: எந்த இசை வேண்டும்
வந்து கேட்டுக் கொள்ளு
எந்த மொழி பாடல் வேண்டும்
வாங்கிச் செல்லு
தேடி வந்து நாடி வந்து
கூடி வந்தால்

ஆண்: மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

குழு: காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு: மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே...

ஆண் & குழு: ஹே மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே...

A little space to find your voice.

About Mannil Vanthu Minnum

Mannil Vanthu Minnum is a song from Enga Thambi (1993). Performed by Mano, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer