Muthaduthey Song Lyrics

Nallavanukku Nallavan·1984

Nallavanukku Nallavan movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

பெண்: கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

ஆண்: கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்

குழு: ............................................

ஆண்: பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை

பெண்: என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்

ஆண்: ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்

பெண்: சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா

ஆண்: முத்தாடுதே முத்தாடுதே ராகம்

பெண்: பித்தானதே பித்தானதே தேகம்

பெண்: தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு

ஆண்: மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா

பெண்: என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்

ஆண்: தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா

பெண்: முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்

ஆண்: பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

ஆண் & பெண்: கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்

A little space to find your voice.

About Muthaduthey

Muthaduthey is a song from Nallavanukku Nallavan (1984). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer