Naan Pesa Vandhen Song Lyrics

Palootti Valartha Kili·1976

Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

பெண்: நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஆண்: ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்

பெண்: ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்

ஆண்: குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ...ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஹா...ஆஆ..

பெண்: நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

பெண்: கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்

ஆண்: ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்

பெண்: சொல் என கண்ணும் ...நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும் ...நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை...

ஆண்: நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

பெண்: உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
இருவரும் : நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

A little space to find your voice.

About Naan Pesa Vandhen

Naan Pesa Vandhen is a song from Palootti Valartha Kili (1976). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer