Adi Aathirathil Sathirathai Song Lyrics

Palootti Valartha Kili·1976

Singer
P. Susheela and Chorus
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

குழு: அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
தினம் அறியாமல் புரியாமல்
அய்யாவை நினைத்தாயோ

குழு: அடி பாத்தியிலே ஓட்டி செல்லும்
பல்லாக்கு நுழையாது
பெண்கள் பள்ளி கொள்ளும்
வீட்டுக்குள்ளே சல்லாபம் நடக்காது

குழு: அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
தினம் அறியாமல் புரியாமல்
அய்யாவை நினைத்தாயோ

பெண்: ராதை கண்ணில் கண்ணன் தோற்றம்
சீதை கண்ணில் ராமன் தோற்றம்
ராதை கண்ணில் கண்ணன் தோற்றம்
சீதை கண்ணில் ராமன் தோற்றம்
எல்லோருக்கும் உள்ளம் ஒன்று உண்டானது
உள்ளம் தன்னில் பத்தாம் வாசல் நின்றாடுது

குழு: அடி கத்து கொண்ட வித்தையெல்லாம் காட்டுறா
உடல் தத்துவத்தை இஷ்டத்துக்கு மாத்துறா
கொண்ட அச்சத்தையும் விட்டுவிட்டு பாக்குறா
வந்த வெட்கத்தையும் விட்டுவிட்டு கேக்கிறா

பெண்: இதுக்கு யாரடி விதிவிலக்கு........
அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
இதை அறியாமல் புரியாமல்
பெண்ணாக பிறந்தாயோ

பெண்: கண்கள் இரண்டு காட்சி ஒன்று
பெண்மை என்றால் ஆட்சி உண்டு
பூவானதும் அங்கே வந்து வண்டாடுது
கூடாது என்று சொன்னால் கூட கொண்டாடுது

குழு: இது ரொம்ப ரொம்ப முத்திவிட்ட பைத்தியம்
இனி நம்மிடத்தில் இல்லையடி வைத்தியம்
இது அந்தி பகல் இல்லாத யாத்திரை
இனி அய்யன் வந்து தந்தால்தான் மாத்திரை

பெண்: இதுக்கு யாரடி விதிவிலக்கு....
அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
இதை அறியாமல் புரியாமல்
பெண்ணாக பிறந்தாயோ

பெண்: அடி பாசியிலே ஊசி கோரு
பல்லாக்கு வடிவாகும்
பெண்கள் பள்ளிக் கொண்டால்
கற்பனையில் சல்லாபம் உருவாகும்

பெண்: அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
இதை அறியாமல் புரியாமல்
பெண்ணாக பிறந்தாயோ

A little space to find your voice.

About Adi Aathirathil Sathirathai

Adi Aathirathil Sathirathai is a song from Palootti Valartha Kili (1976). Performed by P. Susheela, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer