Or Mirugam Song Lyrics

Paradesi·2013

Paradesi movie poster
Singer
V. V. Prasanna and Pragathi Guruprasad
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆஆஆஆஆஅ......
ஆஆஆஅ..........
ஆஆஆஆ.................

ஆண்: யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே

ஆண்: ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

பெண்: யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே

ஆண்: ஆஆஆஅ ஆஆஅ...
ஆஆஅ ஆஆஅ.......

பெண்: தாழ் போன வீடு
கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா
துணையானதே
தாய் போல நெஞ்சு
தாளாத அன்பு
மழை தண்ணியோடு
மாசில்லையே

பெண்: வலி சொல்லவே
இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான்
ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும்
உன் பிள்ளையே
இங்கே உறவு
என் பிள்ளையே

ஆண்: கை கொண்ட
நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம்
உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஆண்: ஒரு ஜீவனோ
உறவிலே சேருதே
இரு ஜீவனோ
ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க
ஆளில்லையே
காலம் நடக்கும்
காலில்லையே

ஆண்: யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே

ஆண்: ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

A little space to find your voice.

About Or Mirugam

Or Mirugam is a song from Paradesi (2013). Performed by V. V. Prasanna, Pragathi Guruprasad. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer