Sengaade Song Lyrics

Paradesi·2013

Paradesi movie poster
Singer
Madhu Balakrishnan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஹோ

ஆண்: ஹோ... செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே
கல்லிகளே போய் வரவா

ஆண்: சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓஒ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே

ஆண்: பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஆண்: ஹோ... செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே
கல்லிகளே போய் வரவா

ஆண்: வெளையாத காட்ட விட்டு
வெளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி
ஜனம் வெளியேருதே ஓ...
வாழ்வோடு கொண்டுவிடுமோ
சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே

ஆண்: உயிரோடு வாழ்வது
கூட சிறு துன்பமே ஹோ...
வயிரோடு வாழ்வது தானே
பெரும் துன்பமே
பெல்லாத விதியும் அழைக்க
போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார்
வாழ்வதோ யார் கண்டது

ஆண்: பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே
பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே
கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான்
பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும்
பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி

ஆண்: ஹோ... செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ... காடுகளே
கல்லிகளே போய் வரவா

பெண்: ஓஓஓஒ.....

ஆண்: காலோடு சரல கிழிக்க
கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே
ஊர் போகுதே

ஆண்: கருவேலங்காடு கடந்து
கல்லூத்து மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர்
சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி
சனம் போகுதே ஓ...

ஆண்: நண்டுகள கூட்டிக் கொண்டு
நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக
ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல்
மீளுமோ யார் கண்டது

ஆண்: பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஆண்: ஹோ... செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ... காடுகளே
கல்லிகளே போய் வரவா

ஆண்: சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே

ஆண்: ஓஓஒ ஓஓஒ........

ஆண்: பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஆண்: ஓ ஓஓ.........

A little space to find your voice.

About Sengaade

Sengaade is a song from Paradesi (2013). Performed by Madhu Balakrishnan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer