Oru Aalampoovu Song Lyrics

Punniyavathi·1997

Singer
Ilayaraja and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

குழு: மேலமாசி வீதியில
மேளச் சத்தம் கேக்குதடி
மீனுக் கண்ணு மீனாட்சியின்
முத்துமணி மாலை ஒண்ணு
ஓம் மேனியிலே சூடிக் கொண்டு
சோடி ஒண்ணு தேடி வந்த
முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
அட முத்தம்மா முத்தம்மா முத்தம்மா

குழு: தம் தம் தம்
தம் தம் தம்ம்ம்ம்........

ஆண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

ஆண்: மோகம் கொடுக்கும்
மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
மொட்டுத்தான் மொட்டு ஹோய்
துள்ளுதடி இள மொட்டு
சிட்டுத்தான் சிட்டு ஹோய்
சிணுங்குதடி கைபட்டு

பெண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

பெண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

பெண்: புன்னவனத்துப் பூங்குருவி
சொன்னதிங்கே ஓம் பேரு
ஊதக்காத்து அடிக்குதையா
ஓரப் பார்வை நீ பாரு

ஆண்: தனிமை என்ன வழி மறிச்சு
தாளம் போட்டு சிரிக்குதடி
தாகம் என்ன அரவனைச்சு
தழுவிக் கொள்ளச் சொல்லுதடி

பெண்: நேந்துக்கிட்ட சாமிக்கு
நேத்திக் கடன் செய்யிறேன்
வா மணிக்குயிலே......

ஆண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

ஆண்: மோகம் கொடுக்கும்
மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
மொட்டுத்தான் மொட்டு ஹோய்
துள்ளுதடி இள மொட்டு
சிட்டுத்தான் சிட்டு ஹோய்
சிணுங்குதடி கைபட்டு

பெண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

குழு: தனனானா னானனானா
தனனானா னானனானா
தனனானா னானனானா னா ஆ.......

ஆண்: பார்வையாலே ஒடம்புக்குள்ளே
பதியம் போட்ட வெடலைப் புள்ள
நம்மைப் பிரிக்க யாரும் இல்ல
நடுவில் எந்த ஊரும் இல்ல

பெண்: பழகிப் போச்சு அச்சம் இல்ல
பேச எதுவும் மிச்சம் இல்ல
நெஞ்சுக்குள்ள காத்தடிச்சு
நேரம் பாத்து சேத்திடுச்சு

ஆண்: முத்துமணி கட்டவா
கட்டிக் கொண்டு ஒட்டவா
வா மணிக்குயிலே.......

ஆண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

ஆண்: மோகம் கொடுக்கும்
மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ

பெண்: மொட்டுத்தான் மொட்டு

ஆண்: ஹேய் துள்ளுதடி இளமொட்டு

பெண்: ஹோய் சிட்டுத்தான் சிட்டு

ஆண்: ஹோய் சிணுங்குதடி கைபட்டு

பெண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

பெண்: ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா

A little space to find your voice.

About Oru Aalampoovu

Oru Aalampoovu is a song from Punniyavathi (1997). Performed by Ilayaraja, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer