Sontham Illai Song Lyrics

Annakili·1976

Annakili movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்

பெண்: அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்

பெண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்

பெண்: அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்

பெண்: கோவில் உண்டு தீபம் உண்டு
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே

பெண்: கோவில் உண்டு தீபம் உண்டு
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே

பெண்: ஓடம் உண்டு நதியும் உண்டு
நதியினிலே வெள்ளம் உண்டு
அக்கரைதான் அருகில் வரவில்லையே
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்

பெண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்

பெண்: பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும்
பயனை வைத்தானே

பெண்: பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும்
பயனை வைத்தானே

பெண்: பாழும் அந்த குருவி என்ன
பாவங்களை செய்ததென்று
பரிசாக கண்ணீரை தந்தானே
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்

பெண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்

A little space to find your voice.

About Sontham Illai

Sontham Illai is a song from Annakili (1976). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer