Suttum Sudar Vizhi Song Lyrics

Siraichalai·1996

Singer
M.G. Sreekumar and K.S. Chithra
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)

ஆண்: நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்

குழு: சித்திரை பூவே
பக்கம் வர சிந்திக்கலாமா
அண்ணனை இங்கே தள்ளி
வைத்து தண்டிக்கலாமா

ஆண்: சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

ஆண்: உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்

பெண்: மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்

ஆண்: உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்

பெண்: மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்

ஆண்: சந்தங்களில்
நனையுதே மௌனங்கள்
தாகமாய்

பெண்: மன்னன் முகம்
தோன்றி வரும் கண்ணிலே
தீபமாய்

ஆண்: என்றும் உன்னை
நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி

பெண்: நானா நானா
நானா ன ன ன ன நானா

ஆண்: நானா நானா நானா
ன ன ன ன நானா

பெண்: சுட்டும் சுடர் விழி
நாள் முழுதும் தூங்கலையே
கண்ணா

ஆண்: தங்க நிலவுக்கு
ஆரிராரோ பாட வந்தேன்
கண்ணா

குழு: ...............................

பெண்: இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்

ஆண்: முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்

பெண்: இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்

ஆண்: முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்

பெண்: விண்ணுலகம்
எரியுதே பௌர்ணமி
தாங்குமா

ஆண்: இன்று எந்தன்
சூரியன் காலையில்
தூங்குமோ

பெண்: கனவில் உன்னை
நான் சேர்ந்திட இமையே
தடையாய் விரிந்தால்
சிறகே இங்கு சிலுவையாய்

ஆண்: { சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)

ஆண்: நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்

ஆண்: { சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)

A little space to find your voice.

About Suttum Sudar Vizhi

Suttum Sudar Vizhi is a song from Siraichalai (1996). Performed by M.G. Sreekumar, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer