Ithu Thaai Pirandha Song Lyrics

Siraichalai·1996

Singer
Mano and Chorus
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இது தாய் பிறந்த
தேசம் நம் தந்தை ஆண்ட
தேசம் இது நாம் வணங்கும்
தேசம் உயிர் நாடி இந்த தேசம்

ஆண்: மண் பெரிதா உயிர்
பெரிதா பதில் தரவா
இப்போதே வா புலியே
நம் வாழ்வும் சாவும்
யார் வசம்

குழு: { வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)

ஆண்: வீரத்தை குண்டுகள்
துளைக்காது வீரனை
சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும்
நெஞ்சங்கள் வாடகை
மூச்சில் வாழாது

ஆண்: இழந்த உயிர்களோ
கணக்கில்லை இருமி
சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா
விளையாட்டு எதிரி
நரம்பிலே கொடி ஏற்று

ஆண்: நிலத்தடியில்
புதைந்திருக்கும்
பிணங்களுக்கும்
மனம் துடிக்கும்

குழு: { வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)

குழு: ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் (4)

ஆண்: தாயோ பத்து மாசம்
தான் அதிகம் சுமந்தது
தேசம் தான் உயிரும்
உடலும் யார் தந்தார்
உணர்ந்து பார்த்தால்
தேசம் தான்

ஆண்: இந்த புழுதி தான்
உடல் ஆச்சு இந்த காற்று
தான் உயிர் மூச்சு இன்று
இரண்டுமே பறி போச்சு
இன்னும் என்னடா
வெறும் பேச்சு

ஆண்: கை விலங்கை
உடைத்திடுடா
எரிமலையே
எழுந்திடுடா

குழு: { வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)

A little space to find your voice.

About Ithu Thaai Pirandha

Ithu Thaai Pirandha is a song from Siraichalai (1996). Performed by Mano, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer