Thakkali Pazham Pola Song Lyrics

Karimedu Karuvayan·1985

Karimedu Karuvayan movie poster
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தக்காளிப் பழம் போல....
ஹே ஏஹே ஹே
அக்கா மக ராசாத்தி
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
டுர்ர்ர்....ஆஅ......

ஆண்: தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி

ஆண்: என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
டுர்ர்ர்ர்ர்ர்ர்.....

ஆண்: தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி

ஆண்: சொந்த பந்தம் ஏதும் இல்லே
சொத்து சொகம் தேடவில்லே
நெஞ்சோட நான் வளத்த முல்லை
கொஞ்சத்தான் இப்போது இல்லே

ஆண்: திருநாளக் காணாம
குயில் ஒண்ணு போச்சு
திருவோட்டுச் சாமிக்கு
இனி எவனோடு பேச்சு

ஆண்: உடலுக்குள் சுமையாக
உலவுது மூச்சு
உலகத்தில் எனக்குள்ள
எல்லாமே போச்சு

ஆண்: கடிவாளம் இல்லாத
குதிரையத்தான்
வலை போட்டு புடிக்க
பல பேருதான்
கடிவாளம் இல்லாத
குதிரையத்தான்
வலை போட்டு புடிக்க
பல பேருதான்

ஆண்: அட எதைச் சொல்லுறது
எதை தள்ளுறது
எவன் பொறந்து இதை வெல்லுறது

ஆண்: தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி

ஆண்: என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட

ஆண்: தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி

ஆண்: தெனம் தோறும்
சொமக்குறோம் பொதிய
தலை மேல போட்ட விதிய
அழுதென்ன தொழுதென்ன லாபம்
அவனும்தான் நெனைக்கல பாவம்

ஆண்: அநியாயம் ஊருக்குள்
அதிகாரம் ஆச்சு
அதுக்குத் தான் மனசாட்சி
தொனை போகலாச்சு
புலி எல்லாம் பசுத்தோலில்
உலவுது தம்பி
புரியாத சனம் எல்லாம்
வணங்குது நம்பி

ஆண்: பல பெண்கள்
மண வாழ்க்கை பறி போனது
பணக்காரன் சொல்லேதான்
சபை ஏறுது

ஆண்: பல பெண்கள்
மண வாழ்க்கை பறி போனது
பணக்காரன் சொல்லேதான்
சபை ஏறுது

ஆண்: அட மெல்ல முடியல
சொல்ல முடியல
கொட்டியத நான் அள்ள முடியல

ஆண்: தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி

ஆண்: என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட

ஆண்: ஏ தன்னானே தன்னனே தன்னனானே
டுர்ர்ர்ர்ர்ர்ர்.....
ஏ தன்னானே தன்னனே தன்னனானே
ஏ தன்னானே தன்னனே தன்னனானே
டுர்ர்ர்ர்ர்ர்ர்..... டுர்ர்ர்ர்ர்ர்ர்..... டுர்ர்ர்ர்ர்ர்ர்.....அ

A little space to find your voice.

About Thakkali Pazham Pola

Thakkali Pazham Pola is a song from Karimedu Karuvayan (1985). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Thirupathooran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer