Kettikari Vaadi Kettikari Song Lyrics

Aagaya Thamaraigal·1985

Aagaya Thamaraigal movie poster
Singer
S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி...

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

குழு: ...........................

பெண்: சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள

பெண்: சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள
யாரு புள்ள அடி சின்னப்புள்ள
நீ சொல்லு புள்ள...

பெண்: அது நானு இல்ல

குழு: ஹஹாஹ் ஹஹாஹ்

பெண்: சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள
அது செல்லப் புள்ள.....அணில் புள்ள

குழு: புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுங்கடி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி......
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ.....

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி...

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

பெண்: முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

பெண்: எங்கே இன்னொரு தரம் சொல்லு......

பெண்: முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

பெண்: அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி
புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி
அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி
விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ
விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம்

பெண்: அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ

பெண்: இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி

பெண்: கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
சம்மதப்பட்டா அவளும் மறுக்கல
சங்கடப்பட்டா வேறு வழியில்ல

பெண்: அவன் தொட்டுப் பிடிச்சான்
அவ விட்டுக் கொடுத்தா
பழக்கமாகி வந்தவன்
அட வழக்கம் போல தந்தவன்
யார் அவன் யார் அவன் யார் அவன்.....

பெண்: அட இது தெரியாதாக்கும்.....

பெண்: கள்ளப்புருஷன்......

பெண்: அடச்சீ......
கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன்
அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன்
வளையல்காரன்.......வளையல்காரன்......

பெண்: புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுவேன்டி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி.....ஹான்....

A little space to find your voice.

About Kettikari Vaadi Kettikari

Kettikari Vaadi Kettikari is a song from Aagaya Thamaraigal (1985). Performed by S. P. Sailaja. Music by Gangai Amaran. Lyrics by Thirupathooran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer