Anbu Ennum Oru Manthiram Song Lyrics

Sri Raghavendrar·1985

Sri Raghavendrar movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்........

ஆண்: அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
வானம் நிலம் யாவும் தேவன் அருள் மேவும்

ஆண்: அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்......

ஆண்: மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்

ஆண்: சீலம் வழுவாத துறவறம் காத்தானே
சினங்களை அறியாத சிந்தனை வாய்த்தானே

ஆண்: அமைதியை காக்கும் அழகிய தோற்றம்
அருள் மலர் பூக்கும் அறிவெனும் தோட்டம்
குருநாதன் அருள் வாழ்கவே
குலம் யாவும் நலம் காணவே.....

ஆண்: அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்

ஆண்: சேத்திரம் பல நாடி திருமாலின் இசை பாடி
நேத்திரம் மலர்ந்தானோ
சாதிகள் பிரிக்காத சமுதாய நலம் கூறும்
சாத்திரம் படைத்தானோ

ஆண்: ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏத்திடும் பெம்மானே
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா

குழு: ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா..........

ஆண்: அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்

ஆண்: பேசுகின்ற தெய்வம் நீ

குழு: ராகவேந்திரா

ஆண்: பேதமற்ற ஞானி நீ

குழு: ராகவேந்திரா

ஆண்: வாழுகின்ற ஜீவன் நீ

குழு: ராகவேந்திரா

ஆண்: வாழ வைக்க வேண்டும் நீ

குழு: ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா......

A little space to find your voice.

About Anbu Ennum Oru Manthiram

Anbu Ennum Oru Manthiram is a song from Sri Raghavendrar (1985). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer