Uchi Malai Megangal Song Lyrics

Vellaiya Thevan·1990

Singer
K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட
காவினில் பூவினில் தேனீக்கள்
கவிதைகள் பாடிடும் நேரம்

பெண்: காவியம் ஆயிரம் நாள் தோறும்
செந்தமிழ்ச் சாலையின் ஓரம்
அம்மம்மா சுகம் அம்மம்மா

பெண்: உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
உச்சி மலை மேகம்....

பெண்: தத்தித் தத்திப் பாய்ந்தோடும் தங்க நதி ஆட
சின்னச் சின்ன நாணல்கள் மெல்ல ஜதி போட
வெள்ளிப் பனி மூட்டங்கள் வந்து வந்து ஓட
பெற்றெடுத்த பெண் போல கையை தொட்டுக் கூட
இந்த மகளை அள்ளி அணைக்கும்
அன்புத் தந்தையோ என்ன விந்தையோ

பெண்: எத்தனை எத்தனை கோலங்கள்
இத்தரை மீதினில் நாளும்
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா
அம்மம்மா சுகம் அம்மம்மா........

பெண்: உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
உச்சி மலை மேகம்....

பெண்: வண்ண முகில் இல்லாத வானம் அதை பார்த்தேன்
வெண்ணிலவின் ஆடைகள் எங்கே என்று கேட்டேன்
சித்திரையில் துவைத்தெடுத்து காய வைத்த ஆடை
மார்கழியில் அணிவாளோ வானம் எனும் தோகை
இந்த வனப்பு கண்டு ரசிக்கும்
வஞ்சி மனம் தான் துள்ளி குதிக்கும்

பெண்: எத்தனை எத்தனை கோலங்கள்
இத்தரை மீதினில் நாளும்
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா
அம்மம்மா சுகம் அம்மம்மா....

பெண்: உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட
காவினில் பூவினில் தேனீக்கள்
கவிதைகள் பாடிடும் நேரம்

பெண்: காவியம் ஆயிரம் நாள் தோறும்
செந்தமிழ்ச் சாலையின் ஓரம்
அம்மம்மா சுகம் அம்மம்மா

பெண்: உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
உச்சி மலை மேகம்....

A little space to find your voice.

About Uchi Malai Megangal

Uchi Malai Megangal is a song from Vellaiya Thevan (1990). Performed by K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer