Aararo Aararo Song Lyrics

Veera Thalattu·1998

Veera Thalattu movie poster
Singer
Swarnalatha
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅஹான்.... ஆஅஹான்....
ஆஅஹான்.... ஆஅஹான்...

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண்: அன்னை செல்வமே
அன்பில் தெய்வமே
அன்னை நெஞ்சிலே
வாழும் இன்பமே

பெண்: என் கண்ணே கண்ணுறங்க
கனி அமுதே நீ உறங்க
ஒரு தாலாட்டுதான்
நான் சொல்லுவேன்

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண்: நானுறங்கும் பொண்ணு மெத்தை
நீயுறங்க போட்டு வச்சேன்
மயில் உறங்கும் பட்டு மெத்தை
மவனுறங்கதான் பொறந்த

பெண்: கொல்லையில தென்னை வச்சு
குருத் ஓல கொட்டா செஞ்சு
சீனி அள்ளி போட்டு திங்க
செல்ல மகன் நீ பொறந்த

பெண்: முந்தியில ஏனைகட்டி
முல்லையில பூ விரிச்சு
சன்ன குரல் பாட்டு கேட்க
சின்ன மகன் நீ பொறந்த

பெண்: வெத்தல பந்தலில்
தாமரை மெத்தையில்
தாய் மடி சேர்ந்து தூங்கனும்

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண்: பட்டமரம் பாலும் ஊறும்
பாவக்காயில் தேனும் ஊறும்
பச்ச புள்ள நீ சிரிச்சா
பச்ச தண்ணிதான் இனிக்கும்

பெண்: அன்பு மகன் நீ நடந்த
ஆழத் தடம் நான் ரசிக்க
தென் கிழக்கா பேஞ்ச மழை
அள்ளி வண்டல்தான் பரப்பும்

பெண்: உன் பாதம் மேல பட்டு
என் பாவம் தீரனும்
பூ போல மேனி தொட்டு
என் ஆயுள் சேரனும்

பெண்: புண்ணியம்தானே என்னுயிர்
வாழ என்னைக்கும்
நிரந்தரம் ஆகணும்

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

பெண்: அன்னை செல்வமே
அன்பில் தெய்வமே
அன்னை நெஞ்சிலே
வாழும் இன்பமே

பெண்: என் கண்ணே கண்ணுறங்க
கனி அமுதே நீ உறங்க
ஒரு தாலாட்டுதான்
நான் சொல்லுவேன்

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

A little space to find your voice.

About Aararo Aararo

Aararo Aararo is a song from Veera Thalattu (1998). Performed by Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer