Kiliyapola Song Lyrics

Veera Thalattu·1998

Veera Thalattu movie poster
Singer
Gangai Amaran and S. P. B. Sailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏய் கிளியப்போல நானிருக்க
குரங்கப்போல பல் இருக்கும்
கூத்தியாள தேடி போறீயே

பெண்: அட ஆச மச்சான்
பேரு கெட்டு நாறிப் போறீயே....

பெண்: மச்சான்
கிளியப்போல நானிருக்க
குரங்கப் போல பல் இருக்கும்
கூத்தியாள தேடி போறீயே

பெண்: அட ஆச மச்சான்
பேரு கெட்டு நாறிப் போறீயே....

ஆண்: கொக்கரக்கோ கேட்கும்
முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு
கொக்கரக்கோ கேட்கும்
முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு

ஆண்: காசு சேக்க கஷ்ட்டப்பட்டு நான்
வெயிலு பட்டு வேர்வை சிந்தி
வேலை வெட்டி செஞ்சுப்புட்டு
விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தா

ஆண்: என்னை விட்டுட்டு
சினிமாவுக்கு ஓடிபோகுற...
கட்டிலுமேல கவுந்தடிச்சு
படுக்க வைக்குற.......

பெண்: கண்ணடிச்சு கண்டவன
கைக்குள்ளதான் போடுவா

ஆண்: ஏய்

பெண்: பத்தினியா வேஷம் போட்டு
காசு பணம் தேடுவா

ஆண்: அவள பத்தி மட்டும் பேசாத

பெண்: சிறுக்கி மவ புகைய போட்டு
குலுக்கி அவ ஆடுவா
ஒன்ன விட பணமிருந்தா
வேற பக்கம் ஓடுவா

பெண்: சொக்க தங்கம்
நானிருக்க பித்தளையை
தேடிப்போற
இது உனக்கு நியாயமாகுமா
கண்ணான மச்சான்
நீயும் நானும் வேற ஆகுமா

ஆண்: கையில் வந்த
காசையெல்லாம் கண்டபடி
விட்டுட்டேன்

பெண்: இப்ப தெரியுதா

ஆண்: கட்டுனவ சொன்ன சொல்ல
கேட்க்காமத்தான் கெட்டுட்டேன்

பெண்: புத்தி வந்திருச்சா

ஆண்: வேஷக்காரி பேச்ச கேட்டு
புத்தி கெட்டு போயிட்டேன்
கை புடிச்ச உன்ன நானும்
கண்கலங்க வச்சுட்டேன்

ஆண்: கல்லானாலும் கணவனின்னு
புல்லானாலும் புருசனின்னு
கல்லானாலும் கணவனின்னு
புல்லானாலும் புருசனின்னு
என்ன நம்பி நீ இருக்கிற

ஆண்: சத்தியமாக உன்னை விட்டு
போக மாட்டேண்டி
கிறுக்கனாக ஊரச் சுத்தி
திரியாமாட்டேண்டி

ஆண் & பெண்: தன்னனான தன்னனானே
தனனானே தன்னனான தன்னனானே....
தனனானே.....

A little space to find your voice.

About Kiliyapola

Kiliyapola is a song from Veera Thalattu (1998). Performed by Gangai Amaran, S. P. B. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer