Alli Thantha Bhoomi Song Lyrics

Nandu·1981

Nandu movie poster
Movie
Nandu
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண்: ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

ஆண்: அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண்: சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா

ஆண்: புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

ஆண்: அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண்: காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ

ஆண்: விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

ஆண்: அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ம்ம்ம்....ம்ம்ம்.......ம்ம்ம்......ம்ம்ம்ம்......

A little space to find your voice.

About Alli Thantha Bhoomi

Alli Thantha Bhoomi is a song from Nandu (1981). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Madhukkoor Kannan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer