Neengatha Ennam Song Lyrics

Vidiyum Varai Kaathiru·1981

Singer
S. Janaki and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு

பெண்: ம்... ஹஹா என்னங்க அது

ஆண்: ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்......

பெண்: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்...

ஆண்: மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது

பெண்: ஆ.......

ஆண்: அது போலவே உனைக் காண
நான் அலை பாய்கிறேன்

பெண்: லல லல லல லா
மழையாக மாறுவேன்
மடி மீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு

ஆண்: காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்

பெண்: ஆ...

ஆண்: என்னென்ன சொல் இந்நாளிலே
நிறைவேற்றுவேன்

பெண்: லல லல லல லா
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்...

பெண்: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்...

A little space to find your voice.

About Neengatha Ennam

Neengatha Ennam is a song from Vidiyum Varai Kaathiru (1981). Performed by S. Janaki, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer