Andhi Mazhai Pozhikirathu Song Lyrics

Raaja Paarvai·1981

Singer
S.P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ............................................

ஆண்: {அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது} (2)
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

ஆண்: அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

ஆண்: ஆ......... ஆ......... ஆ......... ஆ.........

பெண்: தேனில் வண்டு மூழ்கும்போது....

ஆண்: ஆ.........

பெண்: தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே
தாகம் என்பாய்

ஆண்: தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்

பெண்: ஆ...ஆ....

ஆண்: இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண்: அந்தி மழை பொழிகிறது

பெண்: ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

குழு: .......................................................

ஆண்: தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ...ஆ.....ஆ....ஆ......

ஆண்: தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது

பெண்: நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

ஆண்: ஆ....ஆ....

பெண்: சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண்: அந்தி மழை பொழிகிறது

ஆண்: ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

பெண்: ஆ....ஆ...
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

பெண்: அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

A little space to find your voice.

About Andhi Mazhai Pozhikirathu

Andhi Mazhai Pozhikirathu is a song from Raaja Paarvai (1981). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer