Ayya Enna Song Lyrics

Chidambarathil Oru Appasamy·2005

Chidambarathil Oru Appasamy movie poster
Singer
Tippu and Manjari
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: அய்யே சி சீ...

பெண்: அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

பெண்: தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்

பெண்: அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
அய்யே என்ன ஆசை ஆசை
ஆசை....

பெண்: வசதி இல்லா ஏழைப் பொண்ணு
கசங்கின சேலையத்தான்
கட்டிக்க வேணுமே

ஆண்: ஒசத்தியான உடுப்பு எல்லாம்
சினிமாகாரிங்கதான்
உடுத்த வேணுமா

பெண்: அவ பகட்டுல பரிதவிச்சு
என் ஒதட்டுக்கு செகப்படிச்ச

ஆண்: அப்போ அவ கிட்ட
பார்த்ததெல்லாம்
இப்போ ஒன் கிட்ட பார்க்குறனே

பெண்: அவள நெனச்சு
என்ன அணைச்சா
ஒடம்பு முழுக்க கூசுது

ஆண்: அவளப் பார்த்துதானே உந்தன்
நெனப்பு எனக்கு வந்தது

பெண்: சினிமாதான் உன்னப் புடிச்சு
தனியா அழகா தலையத் தடவுது

பெண்: அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

பெண்: அய்யே என்ன ஆசை
ஆசை ஆசை....

ஆண்: கண்ணதாசன் பாட்டில் சொன்ன
கண்ணே கலைமானே
கட்டிப் புடிக்கவா
கண்ட கண்ட படத்தில் வர
காதல் காட்சியத்தான்
நடத்திக் காட்டவா

பெண்: ஒருத்தரும் ஒரு தினுசு
அட நீ அதில் தனி தினுசு
இருக்குற மனம் புதுசு
அதில் தொறக்குற என்ன பழசு

ஆண்: ஹே பொழுது விடியும்
நேரம் ஆச்சு
போனக் கதைய பேசாதே
வாடக் காத்து வாட்டலாச்சு
அம்மா என்ன வாட்டாதே

பெண்: ஒறங்குதையா
ரெண்டு கொழந்த
முழிச்சா மொகத்த எங்க மூடுவ

பெண்: அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

பெண்: தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்

பெண்: அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
அய்யே என்ன ஆசை ஆசை
ஆசை....

A little space to find your voice.

About Ayya Enna

Ayya Enna is a song from Chidambarathil Oru Appasamy (2005). Performed by Tippu, Manjari. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer