Ponna Porandha Song Lyrics

Chidambarathil Oru Appasamy·2005

Chidambarathil Oru Appasamy movie poster
Singer
Karthik and Manjari
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பெண்: பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பெண்: கணவனைத் தேடி
அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக
உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா.....

பெண்: பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பெண்: காற்றோடு வெயிலோடு
மழை வந்த போதும்
தாங்கும் மண் தாய் போல
பெண் அவள்

பெண்: கல்லோடு புல்லோடு
தனை தோண்டும் போதும்
தடுக்காத மண் போல
பெண் அவள்

பெண்: சுமைகளை தாங்காத
சுமைதாங்கி உண்டோ
சுமை கண்டு சோர்கின்ற
பெண் எங்கு உண்டோ

பெண்: கண்ணுக்குள்ளே
கண்ணீரின் ஆறொன்று
கன்னத்திலே பாயாமல்
பாப்பாளே

பெண்: பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

ஆண்: உனை நம்பி உள்ளோரை
நீ மறந்து வந்தால்
நீ நம்பும் தெய்வங்கள்
உனைக் காக்குமா

ஆண்: அவள் கண்ட துன்பத்தில்
உன் பங்கு இல்லை
இன்பங்கள் இங்குன்னைச் சேருமா

ஆண்: அப்போதும் உன் போதை
தவறான போதை
இப்போதும் உன் பாதை
தவறான பாதை

ஆண்: தன் கடமை தவறிடும்
பேர்க்கெல்லாம்
வேண்டியதை தெய்வங்கள்
காட்டாது

ஆண்: பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

ஆண்: கணவனைத் தேடி
அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக
உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா.....ஆ

ஆண்: பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

A little space to find your voice.

About Ponna Porandha

Ponna Porandha is a song from Chidambarathil Oru Appasamy (2005). Performed by Karthik, Manjari. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer