Ennai Ketkkum Song Lyrics

Kasthuri Maan·2005

Kasthuri Maan movie poster
Singer
Tippu and Manjari
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்

ஆண்: ஹேய் என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை
விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

ஆண்: ஹா பறக்கின்ற குயில் தன்னை
பிடித்திடப் பார்த்தாயா
காட்டுக் குயில் இசை தனை கூண்டுக்குள் அடைப்பாயா
வாழ்க்கையில் நடப்பதை நடிப்பென நினைத்தாயா
மேடையின் நடிப்பினை வாழ்வென நினைப்பாயா
வேடிக்கை விளையாட்டு உன் பொழுதுபோக்கு
புது உலகின் மாற்றங்களிலே
புரிந்ததடி உனது இதயம்
நான் உனக்கு பகை அல்ல என்னைச் சீண்டாதே

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

குழு: தகிட தக தகிட
தக தகிட தக தகதிமி
தக தகிட தக தகிட தக தகதிமி

ஆண்: மனதில் உறுதி வேண்டும்

குழு: மனதில் உறுதி வேண்டும்

ஆண்: வாக்கினிலே இனிமை வேண்டும்

குழு: வாக்கினிலே இனிமை வேண்டும்

ஆண்: நினைவு நல்லது வேண்டும்

குழு: நினைவு நல்லது வேண்டும்

ஆண்: நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

குழு: நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

ஆண்: தங்கம் என்றாலும் வைரம் என்றாலும்
எதிலும் எனது மனம் லயித்ததில்லை

ஆண்: இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எதுவும் எளிதில் என்னை ஜெயித்ததில்லை

ஆண்: கற்கள் அழாது சிற்பம் எழாது
கைகள் தொழாது கண்ணின் மணியே
சொல்லை எடுத்து என்னை அடித்து
சிற்பம் வடித்த சின்னக் கிளியே
எதிர் வரும் காற்றினில் வளையும் நாணல் அல்ல
வளைந்த வில்லிலும் நுழையும் இசையடி

பெண்: நிஸ்ஸா நிஸ நிஸா
நிஸ கரிஸ நிரி ஸநித ஸநிதபா
ரிக்கா ரிக மரி
ரிக பபப மகரி மகரி ஸநிஸா

பெண்: நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ...
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ...
நாதிர் தீதர் திமித நாதிர் தீதர் திமித
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் தன
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த நாதிர் தன திரன

பெண்: ரிர்ரிர்ரி கக்கக்க மம்மம்ம
நிந்நிந்நி ஸஸ்ஸஸ்ஸ
ரிர்ரிர்ரி மம்மம்ம பப்பப்ப தத்தத்த
மப தநி ஸரி கம பமகரி ஸநி ரி

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

A little space to find your voice.

About Ennai Ketkkum

Ennai Ketkkum is a song from Kasthuri Maan (2005). Performed by Tippu, Manjari. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer