Kekkaliyo Kekkaliyo Song Lyrics

Kasthuri Maan·2005

Kasthuri Maan movie poster
Singer
Tippu and Manjari
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: ஹோ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே...

பெண் குழு: கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

ஆண் & குழு: கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்

பெண் குழு: என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

ஆண்: யமுனைக் கரையில் வந்து வந்து மோதும்
அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும்

பெண்: அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே
நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே

ஆண்: வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும்
நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்

பெண்: உன்னைப் பார்க்காது கரம் சேர்க்காது
தவிக்கும் தவிப்பை
யாரைக் கண்டு நானும் சொல்வேன்

ஆண்: கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம்

பெண்: என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

பெண் குழு: ஓ... ஆ......ஆ.....ஆ...
ஆ.....ஆ.....ஆ......ஆ......ஆ...

பெண்: முள்ளிலே முத்தை இட்டு
தூங்கும் படி சொன்னாய்
எவரால் முடியும் நீ சொல்லு கண்ணா

ஆண்: கண்ணனின் கண்கள் விடும்
பாணம் ஒரு போதும்
காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது

பெண்: கொல்லுதே தனிமை என்னை இந்த நாளில்
கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் சேலை

ஆண்: மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும்
அனல் போல் கொதிக்கும்
ஆசை கொண்ட தேகம் ரெண்டும்

பெண் குழு: கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

பெண்: கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்

A little space to find your voice.

About Kekkaliyo Kekkaliyo

Kekkaliyo Kekkaliyo is a song from Kasthuri Maan (2005). Performed by Tippu, Manjari. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer