Bharathikku Kannamma Song Lyrics

Priyamudan·1998

Priyamudan movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Arivumathi
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

பெண்: ........................

ஆண்: பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

ஆண்: ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண்: பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

பெண்: ........................

ஆண்: அய்யய்யோ தீயை
எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை
வாங்கித் தந்தாளே

பெண்: ........................

ஆண்: ஹே கல்லைத்தான்
தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட
உள்ளம் திறக்கும் அவள்
பெயரைக்கேட்டு வந்தால்
என் உயிரின் பாதி தருவேன்

ஆண்: அவள் உயிரைக்கேட்டு
வந்தால் என் உயிரின் மீதி
தருவேன் வீசுகின்ற காற்றே
நீ நில்லு வெண்ணிலாவின்
காதில் போய் சொல்லு

ஆண்: { பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா } (2)

பெண்: ........................

ஆண்: { பூட்டுக்கும் பூட்டைப்
போட்டு மனதை வைத்தேனே } (2)
காட்டுக்குள் பாதைப் போடும்
காற்றாய் வந்தாயே

பெண்: ........................

ஆண்: ........................

ஆண்: உன்னோடு உலகம்
சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு
உயிலும் எழுதட்டுமா நான்
பறவையாகும் போது உன்
விழிகள் அங்கு சிறகு

ஆண்: நான் மீன்களாகும்
போது உன் விழிகள் கங்கை
ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி

ஆண்: பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

ஆண்: ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண்: பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

ஆண்: ........................

A little space to find your voice.

About Bharathikku Kannamma

Bharathikku Kannamma is a song from Priyamudan (1998). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer