Chinna Chinna Roja Poove Song Lyrics

Poovizhi Vasalile·1987

Poovizhi Vasalile movie poster
Singer
K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னை பெத்த தாய் யாரு

ஆண்: சொல்லி கொள்ள வாயுமில்லை
அள்ளி கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை

ஆண்: சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு

ஆண்: சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடி வைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே

ஆண்: ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன்தானடா
சோலை கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம்

ஆண்: சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னை பெத்த தாய் யாரு

ஆண்: கண்ணில் உன்னை காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னை விட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு

ஆண்: வந்ததென்று எண்ணுகின்றேன்
வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி......

ஆண்: சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னை பெத்த தாய் யாரு

ஆண்: சொல்லி கொள்ள வாயுமில்லை
அள்ளி கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை

ஆண்: சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு

A little space to find your voice.

About Chinna Chinna Roja Poove

Chinna Chinna Roja Poove is a song from Poovizhi Vasalile (1987). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer