Ethanai Konam Ethanai Parvai Song Lyrics

Ethanai Konam Ethanai Parvai·1982

Ethanai Konam Ethanai Parvai movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Jayakanthan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எத்தனை கோணம் எத்தனை பார்வை
ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில்
பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்

குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை......

ஆண்: மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க

ஆண்: மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க
நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க

குழு: நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க

ஆண்: நாளும் வளரணுங்க நம்ம நாடும் செழிக்கணுங்க

குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை......

ஆண்: காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க

ஆண்: காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க
வாட்டி வதைப்பவங்க வட்டி கறப்பவங்க
வர்க்கம் ஒழியணுங்க நம்ம வாழ்க்கை மாறணுங்க

குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை.......

ஆண்: மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க

ஆண்: மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க
கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க

குழு: கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க

ஆண்: கடவுள் உருவமுங்க அவங்க கையில் உலகமுங்க

குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை......

ஆண்: உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க

ஆண்: உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க
கடலை கடப்பவங்க வானை கையில் வளைப்பவங்க
கவலை வளர்க்கலாமோ...
மனிதக் கருவை அழிக்கலாமோ.......

ஆண்: வறுமை ஒழியணுங்க வந்தது வளரணுங்க
வரும்முன் காக்கணுங்க வழியும் இருக்குதென்றால்

குழு: நீங்கள் வறுமை அழிப்பதாக
கதைகள் சொல்லலாமோ

குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை.....

ஆண்: ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில்
பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்

குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை......

A little space to find your voice.

About Ethanai Konam Ethanai Parvai

Ethanai Konam Ethanai Parvai is a song from Ethanai Konam Ethanai Parvai (1982). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Jayakanthan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer