Andha Naal Song Lyrics

Anney Anney·1983

Anney Anney movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
அட போடா எவன் கேள்வி கேட்பது
இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது

ஆண்: அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது

ஆண்: கண்ணா வா ஒண்ணா
கோலிகள் ஆடலாம் வா

குழு: வா வா

ஆண்: உன்னாலே நானும்
வாலிபனாகலாம் வா

குழு: வா வா

ஆண்: வப்பேனடா குறி தப்பாமத்தான்
எப்போதும் நான் ஜெயிப்பேன்
கண்ணாமூச்சி நாம விளையாடினா
அண்ணாச்சிதான் புடிப்பேன்

குழு: சமயமும் கெடச்சது
சபலமும் பொறந்தது ஆ...

ஆண்: சிறு சிறு விஷயத்தில்
மன சுகத்தை பெறுவது

ஆண்: அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது

குழு: வாவா வாவாவாவ வா வாவா
வாவா வாவாவாவ வா

ஆண்: அண்ணேன்னு என்ன அழைக்கணும் நீயடா

குழு: அண்ணே

ஆண்: உன்னாட்டம் இங்கே உழைப்பவன் தானடா

குழு: வாவாவா

ஆண்: பாட்டாளி தான் என் கூட்டாளி தான்
ஒண்ணாகத் தான் நினைப்பேன்
நீ என்னடா அட நான் என்னடா
பீடி தந்தா குடிப்பேன்

குழு: சமத்துவம் தெரிஞ்சவன்
சகலமும் புரிஞ்சவன் ஆ...

ஆண்: இடம் தர மறுத்திடும்
கெட்ட இதயம் எனக்கில்லே

ஆண்: அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது

ஆண்: வெள்ளம் போல் செல்வம் இருப்பவன் நானடா

குழு: ஆமா

ஆண்: பிள்ளை போல் உள்ளம் படச்சவன் தானடா

குழு: ஆமா

ஆண்: இன்னும் கூட நான் சின்னப் பையன்
இருந்தா என்ன தவறா
வெட்கக் கேடா இத வெளியே சொன்னா
சொன்னா என்ன விடுடா

குழு: இளமையில் தரித்திரம்
இது எங்கள் சரித்திரம் ஆ...

ஆண்: வசதிகள் கெடச்சதும்
பழங்கதைகள் பொறக்கல

ஆண்: அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
அட போடா எவன் கேள்வி கேட்பது
இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது

ஆண்: அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது

A little space to find your voice.

About Andha Naal

Andha Naal is a song from Anney Anney (1983). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer