Nadhiyoram Song Lyrics

Annai Or Aalayam·1979

Annai Or Aalayam movie poster
Singer
S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: நதியோரம் ம்ம்ம்ம்......
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல....
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்.....

ஆண்: நதியோரம் ம்ம்ம்ம்....
நதியோரம் நீயும் ஒரு
நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல...
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்...

பெண்: வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன

பெண்: முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ

பெண்: சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

ஆண்: நதியோரம் ம்ம்ம்ம்...
நதியோரம் ம்ம்....

ஆண்: தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன

ஆண்: பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே

ஆண்: மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

பெண்: நதியோரம் ம்ம்ம்ம்...
நதியோரம் ம்ம்....

ஆண்: நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல...

பெண்: நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

ஆண் & பெண்: நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

A little space to find your voice.

About Nadhiyoram

Nadhiyoram is a song from Annai Or Aalayam (1979). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer