Oru Kaadhal Devathai Song Lyrics

Sainthadamma Sainthadu·1977

Singer
P. Susheela and S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ

பெண்: ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்

பெண்: ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்

ஆண்: தமிழ் கொண்ட வைகைப்போ.....லே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும்
ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட

பெண்: பனிப் போல கொஞ்சும் உன்.....னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ
நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட

ஆண்: மேலாடையாய் நான் மாறவோ

பெண்: கூடாதென நான் கூறவோ
வா..... மெல்ல வா........

ஆண்: ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ

பெண்: கடல் நீலம் கொண்ட கூ...ந்தல்
கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை
கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட

ஆண்: மாமல்லன் என்னைக் கொஞ்......சும்
சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத
காதல் சிற்பங்கள் உருவாக

பெண்: ஊடல் எனும் ஒரு நாடகம்

ஆண்: கூடல் தனில் அரங்கேறிடும்
வா...... நெருங்கி வா........

பெண்: ஒரு காதல் நாயகன்

ஆண்: மலர் மாலை சூடினான்

பெண்: இரு கண்ணில் ஆயிரம்

ஆண்: தமிழ்க்கவிதை பாடினான்

பெண்: லாலா லால்ல லால்ல லா
லாலா லால்ல லால்ல லா

A little space to find your voice.

About Oru Kaadhal Devathai

Oru Kaadhal Devathai is a song from Sainthadamma Sainthadu (1977). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer