Ootha Kaathu Song Lyrics

Gramathu Athiyayam·1980

Gramathu Athiyayam movie poster
Singer
P. Jayachandran and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது

பெண்: ஆ......
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது

பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில

பெண்: கொத்தமல்லி பூவாசம்
அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
கொத்தமல்லி பூவாசம்
அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா

ஆண்: நான் என்னத்த செய்ய ஆ....ஆ.....ஆ....ஆ...

இருவர்: நான் என்னத்த செய்ய

பெண்: நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசைக் கட்டளப் போட்டு கட்டுற பாட்டு
என்னையும் மீறுது

பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில

பெண்: பக்கத்தில நீ வேணும்
கட்டிக் கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்தில நீ வேணும்
கட்டிக் கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது

ஆண்: அத சொல்லடி புள்ள.....ஆ.....ஆ....ஆ....

பெண்: அத சொல்லுற புள்ள
வெக்கத்த மெல்ல விட்டுட்டு கேக்குது
நீயும் அள்ளுற போதும் கிள்ளுற போதும்
ஆசைங்க தாக்குது

பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில

பெண்: வாசமுள்ள பூமுல்ல
வாடப்பட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா

ஆண்: அத என்கிட்ட சொல்லு ......

பெண்: ஆ.....ஆ....ஆ...அத உங்கிட்ட சொன்னா
ஆசைங்க ஒண்ணா என்னையும் மிரட்டுது
நீ பாக்குற போதும் கேக்குற போதும்
பார்வையும் வெரட்டுது

பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை ஆட்டுது வாட்டுது

பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில

A little space to find your voice.

About Ootha Kaathu

Ootha Kaathu is a song from Gramathu Athiyayam (1980). Performed by P. Jayachandran, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer