Paarthale Theriyaatha Song Lyrics

Sri Raghavendrar·1985

Sri Raghavendrar movie poster
Singer
Manorama and Vani Jairam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு....புரியாத ஆனந்தம் நோக்கு
புரியாத ஆனந்தம் நோக்கு
உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார்
எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார்

பெண்: பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு....

பெண்: ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா
எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா
சுகமோ சாந்தி கல்யாணமோ

பெண்: அசடே துளிக்கூட தூங்கல்லையா
அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா
அடியே.....ரொம்ப கும்மாளமோ

பெண்: நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே
எங்கிட்ட கன்னத்த காமி
தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன்
தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன்
பொல்லாத மோகம் வந்ததென்ன
உல்லாசம் நீதான் கண்டதென்ன.......

பெண்: பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு....

பெண்: எங்கே மணவாளன் கைப்பட்டதோ
அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ
ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ

பெண்: கண்ணே சிவப்பான கதை என்னடி
கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி
விடியும் வரையில் போராட்டமோ

பெண்: நீ பட்டப்பாடு என்ன பெண்ணே
இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ

பெண்: சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி
சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி
சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி
எங்கிட்ட வந்து கேட்டுக்கடி.....

பெண்: பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு....
புரியாத ஆனந்தம் நோக்கு

பெண்: பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு....

A little space to find your voice.

About Paarthale Theriyaatha

Paarthale Theriyaatha is a song from Sri Raghavendrar (1985). Performed by Manorama, Vani Jairam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer