Aadal Kalaiye Devan Song Lyrics

Sri Raghavendrar·1985

Sri Raghavendrar movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.

ஆண்: ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.........ஊ....

ஆண்: மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

ஆண்: வண்ண வண்ண மேலாடை ஆ....ஆ....ஆ...ஆ....ஆ.....
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவிதான் வந்தாள்
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்

ஆண்: ஆடல் கலையே தேவன் தந்தது........
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...

ஆண்: ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.........ஊ....

ஆண்: சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ

ஆண்: விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

ஆண்: தலைச் சிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ
குரல் வழி வரும் கனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!

ஆண்: ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்........

ஆண்: ஆடல் கலையே தேவன் தந்தது........
ஆடல் கலையே தேவன் தந்தது........
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...

ஆண்: ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.........ஊ....

A little space to find your voice.

About Aadal Kalaiye Devan

Aadal Kalaiye Devan is a song from Sri Raghavendrar (1985). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer