Pattula Sela Kazhuthula Song Lyrics

Pannaipurathu Pandavargal·1982

Singer
Malaysia Vasudevan and Vani Jairam
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கப் போறேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கப் போறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப் போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாரேன்....

ஆண்: நம்மூரு டூரிங்குலே நல்ல படம் வந்திருக்கு
நாம ரெண்டு பேரும் போவோம் ராத்திரிக்கு
முடிஞ்சு வர்ற நேரத்துலே
முட்ட தோச வாங்கித்தாறேன்
வாடியம்மா நீயும் அந்த கொட்டகைக்கு

பெண்: நான் வர மாட்டேன் வந்தா நீ விட மாட்டே
நான் வர மாட்டேன் வந்தா நீ விட மாட்டே
அணச்சு புடிச்சு நடிக்கும் படத்த
ரசிச்சு மொறச்சு பாக்கும்போது
ஒனக்கும் அந்த நெனப்பு வந்தா என்னத்த செய்வேன்

ஆண்: பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாரேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப் போறேன் இந்த
வெத்தில வாயிலே கிட்டத்துல வந்து முத்தத்த தாயேன்

பெண்: பொள்ளாச்சி ஊருக்குள்ளே
பொருட்காட்சி நடக்குதைய்யா
போய்யிட்டு வந்தா என்ன ரயிலுல
அந்த ஊரு சந்தையிலே அல்வாவும் விக்குமைய்யா
எல்லாமும் வாங்கிக்கொடு கையிலே

ஆண்: துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
இரும்பு போல ஒடம்பு இருக்கு
கரும்பு போல மனசு இருக்கு
காலம் நேரம் சேரும்போது வாங்கித்தாரேன்

பெண்: பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கப் போறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப் போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாரேன்....

ஆண்: பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாரேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப் போறேன் இந்த
வெத்தில வாயிலே கிட்டத்துல வந்து முத்தத்த தாயேன்

A little space to find your voice.

About Pattula Sela Kazhuthula

Pattula Sela Kazhuthula is a song from Pannaipurathu Pandavargal (1982). Performed by Malaysia Vasudevan, Vani Jairam. Music by Gangai Amaran. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer