Thoongatha Niyayangale Song Lyrics

Pannaipurathu Pandavargal·1982

Singer
Ilayaraja
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே
தர்மங்கள் எல்லாம் இங்கு ஊமையாகி போனதோ

ஆண்: தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே.....

ஆண்: சொந்தங்கள் பந்தங்கள் என்றெண்ணி நீ உன்னை
சிறையாக்கி கொண்டாயே சிலையாகி நின்றாயே
ஊரெங்கும் உள்ளோர்கள் உறவென்னும் எண்ணங்கள்
நீயேனும் கொண்டாயா ஏனென்று கேட்டாயா

ஆண்: தர்மத்தின் கண்கள் முன்னே
தாய் என்ன பிள்ளை என்ன
நீ கேளடா வரும் பதில்
இன்னும் ஒரு மௌனம் என்ன

ஆண்: தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே
தர்மங்கள் எல்லாம் இங்கு ஊமையாகி போனதோ

ஆண்: நானென்னும் அகங்காரம் அது செய்யும் அதிகாரம்
எப்போதும் மாறாதோ இன்னல்கள் தீராதோ
தன் வீடு தன் பெண்டு தன் பிள்ளை என்றெண்ணும்
சுயலாப நோக்கத்தில் பலர் வாழ்வு ஏக்கத்தில்

ஆண்: நீ செய்யும் தீமை உன்னை
நிழலாக சேரும் உண்மை
பொய்யல்லடா தமிழ் மறை
சொல்லும் இது சத்தியமன்றோ

ஆண்: தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே
தர்மங்கள் எல்லாம் இங்கு ஊமையாகி போனதோ

ஆண்: தூங்காத நியாயங்களே....

A little space to find your voice.

About Thoongatha Niyayangale

Thoongatha Niyayangale is a song from Pannaipurathu Pandavargal (1982). Performed by Ilayaraja. Music by Gangai Amaran. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer