Punnai Vana Poonguyile Song Lyrics

Sevvanthi·1994

Singer
Arunmozhi and Swarnalatha
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆஅ.....
ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆஅ.....ஆ.....ஆ...
ஆ....ஆஹ்.....ஆஹ்....ஆ.....

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

ஆண்: என்னோடு பேசும் இளம் தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது
சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும்
முன்னாலே வந்து பதில் கூறு நீ

பெண்: என் கண்கள் சொல்லும்......ம்ம்.....ஹா...
என் கண்கள் சொல்லும் மொழி காதலே
என்றென்றும் செல்லும் விலகாமலே
தனியாக நின்றாலும் உன் தாகமே
துணையாக வந்தாலும் தணியாதது...

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பெண்: அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும்
அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும்
தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல்
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்

ஆண்: அலை ஓய்ந்து போகும்........ம்ம்.....ஹோய்
அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே
என்னோடு நீ தானே என் ஜீவனே..

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பெண்: பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா.....ஆ.....

A little space to find your voice.

About Punnai Vana Poonguyile

Punnai Vana Poonguyile is a song from Sevvanthi (1994). Performed by Arunmozhi, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer